| 245 | : | _ _ |a இராபர்ட் கெல்லி நினைவுத்தூண் - |
| 300 | : | _ _ |a நினைவிடம் |
| 500 | : | _ _ |a ஆரணி கோட்டை மைதானத்தின் நடுவில் அமைந்துள்ள கம்பீரமான நினைவுத் தூண் ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாகக் கருதப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரம் பட்டு உற்பத்தியிலும், அரிசி உற்பத்தியிலும் தமிழ்நாட்டில் சிறந்த இடத்தை வகிக்கிறது. இந்த நகரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆரணி கோட்டையும், ராபர்ட் கெல்லியின் நினைவுத் தூணும் அமைந்துள்ளது. இராபர்ட் கெல்லி என்பவர் ஆங்கிலேயப் படைத் தளபதி. 1751இல் நடந்து ஆரணிப் போர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்ச் ஆதரவு பெற்ற ராஜா சாஹிபுக்கும் இடையே நடைபெற்றதாகும். அப்போரில் இராபர்ட் கெல்லி மதுரையை ஆண்ட மருதநாயகத்துடன் சேர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாக போர் புரிந்து ஆங்கிலேயர்களுக்கு வெற்றியை தந்தார். எனினும் அந்தப் போரில் வீரமரணம் அடைந்தார். அவரின் நினைவாக ஆரணிக் கோட்டையின் நடுவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 45 அடி உயர நினைவுத்தூண் ஒன்று Lieutenant colonel urban Vigor's என்பவரால் எழுப்பப்பட்டது. இராபர்ட் கெல்லி கிழக்கிந்திய கம்பெனியின் நில அளவையர் ஆகவும் பணிபுரிந்துள்ளார். கிழக்கிந்தியக் கம்பெனி அவருக்கு பரிசாக அளித்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு இடம் அவர் நினைவாக Kelly's என்று அழைக்கப்படுகிறது. |
| 520 | : | _ _ |a ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றப் போர்களில் கி.பி.1751-இல் நடைபெற்ற ஆரணிப்போர் குறிப்பிடத்தக்கது. இப்போர் பிரெஞ்சுப் படைகளுக்கும், ஆங்கிலேயப் படைத் தளபதி இராபர்ட் கெல்லி தலைமையிலான படைகளுக்கும் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலப்படை வெற்றி பெறினும் தளபதி இராபர்ட் கெல்லி வீரமரணம் அடைந்தார். அவ்வீரரின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் ஒன்று ஆரணிக் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a இராபர்ட் கெல்லி, ஆரணிப் போர், மருதநாயகம், நினைவுத் தூண், கி.பி.1751, Lieutenant colonel urban Vigor's , கிழக்கிந்தியக் கம்பெனி, இராஜா சாஹிப், பிரெஞ்சுப் போர், ஆரணிக் கோட்டை, ஆரணி, திருவண்ணாமலை, ஆங்கிலேய படைத் தளபதி, ராபர்ட் கெல்லி |
| 710 | : | _ _ |a திரு.குமரன் சண்முகம் |
| 752 | : | _ _ |a ஆரணிக் கோட்டை மைதானம் |c ஆரணி |d திருவண்ணாமலை |f ஆரணி |
| 906 | : | _ _ |a கி.பி.1751 |
| 914 | : | _ _ |a 12.6718936 |
| 915 | : | _ _ |a 79.2829311 |
| 934 | : | _ _ |a ஆரணிப் பட்டு நெசவு, மாமண்டூர் குடைவரைக் கோயில்கள், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் |
| 995 | : | _ _ |a TVA_MON_00027 |
| barcode | : | TVA_MON_00027 |
| book category | : | நினைவிடங்கள் |
| cover | : |
|
| Primary File | : |